புதுச்சேரி
கோப்பு படம்

கடலோர மண்டல மேலாண்மை குழு அமைக்க வேண்டும் - முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2023-10-03 08:33 GMT   |   Update On 2023-10-03 08:33 GMT
  • மத்திய அமைச்சகம் விரிவான வழிகாட்டு தல்களை வெளியிட்டது.
  • யூனியன் பிரதேச கடலோர மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது

புதுச்சேரி:

புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

1991, 2011-ம் ஆண்டுகளில் கடலோர ஒழுங்குமுறை மண்ட லங்களை உருவாக்க மத்திய அமைச்சகம் விரிவான வழிகாட்டு தல்களை வெளியிட்டது. இந்த அறிவிப்பி ன்படி, புதுவை அரசு 2011-ல் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பை அமல்படுத்தவும் கண்காணிக்கவும் யூனியன் பிரதேச கடலோர மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது.

மற்றொரு விதியானது, கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான ஒழுங்குமுறை மண்டலக் குழுவை அமைக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியது. புவியியல் ரீதியாக 4 பகுதிகளாக இருப்பதை கருத்தில்கொண்டு, புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய இடங்களில் 4 பிராந்திய குழுக்களை அமைக்க அரசு முடிவு செய்தது. மீனவர்சமூகத்தின் 3 உறுப்பினர்கள் உட்பட 4 பிராந்தியங்களில் குழுக்க ளின் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அரசாணை 8-12-2014-ல் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆணையை செயல்படுத்த வில்லை.

இதன் மூலம் மத்திய சட்டத்தின் நோக்கத்தையே புதுவை அரசு தோற்கடித்துவிட்டது. கடற்கரை மேலாண்மை பாதுகாக்கப்பட வில்லை. உடனடியாக 4 பிராந்தியத்திலும் கடலோர மண்டல மேலாண்மை குழுக்களை செயல்படுத்த கவர்னர், முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News