புதுச்சேரி

கோப்பு படம்.

மது குடித்து விட்டு ரகளை செய்த 6 பேர் கைது

Published On 2022-08-21 11:18 IST   |   Update On 2022-08-21 11:18:00 IST
  • புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
  • மது குடித்து விட்டு ரகளை செய்பவர்களையும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொள்ப வர்களையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

புதுச்சேரி:

மது குடித்து விட்டு ரகளை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவையில் சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மது குடித்து விட்டு ரகளை செய்பவர்களையும் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக நடந்து கொள்ப வர்களையும் போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

ஒரே நாளில் நெட்டப்பாக்கம், திருக்கனூர், திருபுவனை, வில்லியனூர் ஆகிய பகுதிகளில் ரகளை செய்த 13 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் மது குடித்து விட்டு ரகளை செய்த மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:-

நெட்டப்பாக்கம் அருகே கல்மண்டபம் பெட்ரோல் பங்க் அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த கீழுர் மூகாம்பிகை நகர் விசுவநாதன்(42), ஏரிப்பாக்கம் மெயின் ரோட்டில் மது குடித்து விட்டு பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்த சூரமங்கலத்தை சேர்ந்த அருள்குமார்(35), கொத்தம்பாக்கத்தை சேர்ந்த வினோத்(29) மற்றும் நெட்டப்பாக்கம் வடகொள்ளி ரோட்டில் குடித்து விட்டு ரகளை செய்த பண்டசோழநல்லூர் வி.வி.ஆர். நகரை சேர்ந்த ராம்குமார் (35) ஆகிய 4 பேரை நெட்டப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

இதுபோல் திருக்கனூர் அருகே கே.ஆர்.பாளையம்-திருவண்ணாமலை ரோட்டில் மது குடித்து விட்டு ரகளை செய்த திருவக்கரையை சேர்ந்த ராஜகுரு என்பவரை திருக்கனூர் போலீசாரும், வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறாக குடித்து விட்டு தகராறில் ஈடுபட்ட கோலியனூர் கூட்டுரோடு பகுதியை சேர்ந்த அசோக்(28) என்பவரை வில்லியனூர் போலீசார் கைதுசெய்தனர்.

Tags:    

Similar News