புதுச்சேரி

கோப்பு படம்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடத்தை பெற வேண்டும்

Published On 2023-05-20 11:12 IST   |   Update On 2023-05-20 11:12:00 IST
  • மாணவர், பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
  • ஜூன் மாதம் இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

புதுச்சேரி:

புதுவை மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்டாக் அமைப்பின் நிர்வாக கமிட்டி ஒருங்கிணைப்பாளர், கன்வீனர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவை அறிவிக்க வேண்டும். மேலும் சென்டாக் கலந்தாய்வுக்கு முன்பாக மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க ஆவன செய்யவேண்டும்.

ஜூலை மாதம் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடக்க உள்ள நிலையில் புதுவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற வேண்டும்.

அதே போல் ஜூன் மாதம் இளநிலை படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 550 இடங்களில் 50 சதவீத இடங்களான 275 எம்.பி.பி.எஸ். இடங்களை அரசு ஒதுக்கீடாக பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News