கோப்பு படம்.
பொது இடத்தில் மது அருந்திய 5 பேர் கைது
- கூட்டமாக அமர்ந்து மது அருந்தி ெகாண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
- இதையடுத்து இவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் ெபாது இடத்தில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பலர் அதனை மீறி பொது மக்கள் கூடும் இடங்களிலேயே மது அருந்தி வருகின்றனர்.
குறிப்பாக புதுவை- கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் திடலில் மாலை பொழுதானதும் கூட்டம் கூட்டமாக இரவு முழுவதும் பலர் மது அருந்துகின்றனர்.
இதனால் அருகில் குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.
தொடர்ந்து இது போன்று பல புகார்கள் வந்ததால் நேற்று இரவு உருளையன்பேட்டை போலீசார் ரோடியர் மில் திடலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கூட்டமாக அமர்ந்து மது அருந்தி ெகாண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் நயினார்மண்டபம் துளுக்கானத்தம்மன் நகரை சேர்ந்த ஆனந்த்(42), மூலக்குளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுரேஷ்(30), தவளக்குப்பம் பகுதியை சேர்ந்த விஜய்(27) மற்றும் புதுவை பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த பிரசாத்(33), கோரிமேடு காமராஜர் நகரை சேர்ந்த தமிழ்வண்ணன்(37) என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.