புதுச்சேரி

கோப்பு படம்.

காங்கிரஸ் நிர்வாகிகள் 5 பேர் சஸ்பெண்டு-மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் அதிரடி

Published On 2022-08-22 11:39 IST   |   Update On 2022-08-22 11:39:00 IST
  • புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த அரசியல் விவகார குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் வழிமறித்தனர்.
  • மாநில தலைவரை ஏன் மாற்றவில்லை? என கேட்டு அவரின் காரை முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி:

புதுவை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த அரசியல் விவகார குழு கூட்டத்தில் பங்கேற்க வந்த மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை முன்னாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் வழிமறித்த–னர்.

மாநில தலைவரை ஏன் மாற்றவில்லை? என கேட்டு அவரின் காரை முற்றுகையிட்டனர். இது–தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கருணா–நிதி, அப்துல்ரகுமான், செயலாளர்கள் சரவணன், சிவாஜி, சேவாதள துணைத்தலைவர் ஆகிய 5 பேர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணி–யன் அவர்களுக்கு அனுப்பி–யுள்ள கடிதத்தில், கட்சியின் மேலிட பொறுப்பாளரை தடுத்து, அவமானப்படுத்தி, காரில் ஏறிய பின் கண்ணாடி, கதவுகள், டயர்களை சேதப்படுத்தி, மண்ணை வாரி இறைத்த நீங்கள் நடந்துகொண்ட விதம் கட்சியின் கண்ணியத்துக்க விரோதமானது.

இவை அனைத்தும் முன்னாள் அமைச்சர்கள், பொதுமக்கள் முன்னிலை–யில் நடந்தது.

எனவே நீங்கள் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுகிறீர்கள். ஏன் உங்களை நிரந்தரமாக நீக்கக்கூடாது? என்ற பதிலை 7 நாட்களுக்குள் கட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News