புதுச்சேரி

பள்ளி முதல்வர் தேவதாஸ்.

பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் 39 பேர் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி சாதனை

Published On 2023-10-19 13:59 IST   |   Update On 2023-10-19 13:59:00 IST
  • மாணவர்கள் 39 பேர் நீட் தேர்வு மூலம் முதல் கலந்தாய்வில் மருத்துவக் கல்லூரியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • கடந்த 2018-ம் ஆண்டு 38 பேரும் 2019-ம் ஆண்டு 44, 2020- ம் ஆண்டு 37, 2021-ம் ஆண்டு 30, 2022-ம் ஆண்டு 36 மாணவர்களும் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி:

புதுவை பெத்தி செமினார் பள்ளி மானாவர்கள் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து அதிகப்படியான இடங்களை நீட் தேர்வில் வென்று முதல் இடத்தில் இருந்து வருகிறார்கள்.

2022-23ல் கல்வி ஆண்டில் அரசு தேர்வு எழுதிய 204 மாணவர்களில் பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் 39 பேர் நீட் தேர்வு மூலம் முதல் கலந்தாய்வில் மருத்துவக் கல்லூரியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது ஏறத்தாழ 20 சதவீதம் ஆகும். நீட் தேர்வு மூலம் 20 சதவீதம் மருத்துவ இடங்களை வென்ற ஒரே பள்ளி பெத்தி செமினார் மட்டுமே ஆகும். இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கும் தேர்வு செய்யப்பட்ட பெத்தி செமினார் மாணவர்களில், ஜிப்மர் மருத்துவக் கல்லூரி-7 இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி-10, பிம்ஸ் மருத்துவக் கல்லூரி-5, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி-7, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி-2, வேலூர் சிஎம்சி மருத்து வக்கல்லூரி-1, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி-01, ராஜீவ்காந்தி ஆயுர்வேத மருத்து வக்கல்லூரி-1, ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் சுல்லூரி-1, மகாத்மா-1, காந்தி பல் மருத்துவக் கல்லூரி-2, வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி-2, மஹே பல் மருத்துவக் கல்லூரி-2, கடந்த ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கு தேர்வு பெற்ற

பெத்தி செமினார் மாணவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு 38 பேரும் 2019-ம் ஆண்டு 44, 2020- ம் ஆண்டு 37, 2021-ம் ஆண்டு 30, 2022-ம் ஆண்டு 36 மாணவர்களும் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News