புதுச்சேரி

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு கவர்னர் தமிழிசை விருது வழங்கிய காட்சி.

20 ஆசிரியர்களுக்கு விருது-கவர்னர் தமிழிசை வழங்கினார்

Published On 2022-09-05 14:18 IST   |   Update On 2022-09-05 14:18:00 IST
  • நாடு முழுவதும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
  • கவர்னர் தமிழிசை நல்லாசிரியர்கள் 20 பேருக்கு மாநில விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

புதுச்சேரி:

நாடு முழுவதும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.

புதுவை அரசு சார்பில் கருவடிகுப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் ஆசிரியர் திருநாள் விழா நடந்தது.கலெக்டர் வல்லவன் வரவேற்றார்.

சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய். ஜெ. சரவணன் குமார், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான்குமார், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ. ஆகியோர் வாழ்த்தி பேசினர். பணிஓய்வு பெற்ற ஆசிரியர்களை முதல்-அமைச்சர் ரங்கசாமி பாராட்டி கவுரவித்தார்.

கவர்னர் தமிழிசை நல்லாசிரியர்கள் 20 பேருக்கு மாநில விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது – தலைமை ஆசிரியர் விஜயராகவன், ஆசிரியர்கள் சத்தியமூர்த்தி, சோமசுந்தரம், சுரேஷ் ஆகியோருக்கும், முதல்வரின் சிறப்பு விருது – ஆசிரியர்கள் செல்வக்குமரன், கவிதா, லட்சுமி, தலைமை ஆசிரியை அபரணாதேவி, ஆசிரியை சாச்சி, தொழில்நுட்ப ஆசிரியர் கிருஷ்ணன் ஆகியோருக்கும், கல்வி அமைச்சரின் வட்டார விருது, உடற்கல்வி ஆசிரியர் சுப்ரமணியன், விரிவுரையாளர் மதிவாணன், ஆசிரியர்கள் கணேசன், முரளீதரன், விரிவுரையாளர் ராஜசேகரன், ஆசிரியர்கள் பிரபாகரன், சுரேஷ்குமார், வாசுகி, விரிவுரையாளர் அஜித்குமார், தலைமை ஆசிரியர் குதுல வெங்க–டேஸ்வர ராவ் ஆகியோ–ருக்கும் வழங்கப் பட்டது.

விருதுபெற்ற ஆசிரியர்கள் ஏற்புரை யாற்றினர். பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு நன்றி கூறினார். 

Tags:    

Similar News