புதுச்சேரி

கோப்பு படம்.

மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

Published On 2023-03-07 10:36 IST   |   Update On 2023-03-07 10:36:00 IST
  • புதுவை அருகே ரெட்டியார்பாளையத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
  • அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டை பையில் சோதனை நடத்தினர்.

புதுச்சேரி:

ரெட்டியார்பாளையத்தில் மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

புதுவை ரெட்டியார் பாளையம் லாம்பர்ட் சரவணன் நகரில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர். அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டை பையில் சோதனை நடத்தினர்.

அப்போது அவரது சட்டை பையில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மொத்தம் 250 கிராம் கஞ்சா பொட்ட லங்கள் வைத்திருந்தனர். இதனை பறிமுதல் செய்து அந்த வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சங்கர்(வயது24), அருண்(25) என்பதும், இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News