புதுச்சேரி

கோவில் திருப்பணிக்கான நிதி உதவியை கென்னடி எம்.எல்.ஏ.விடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கிய காட்சி.

2 கோவில் திருப்பணிக்கு நிதி-கென்னடி எம்.எல்.ஏ. விடம் முதல்- அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்

Published On 2023-07-06 06:43 GMT   |   Update On 2023-07-06 06:43 GMT
  • கென்னடி எம்.எல்.ஏ. அந்தந்த கோவில் நிர்வாகிகளிடம் அந்த காசோலையை அளித்தார்.
  • பிரமுகர் நோயல், கிளைச் செயலாளர்கள் செல்வம், சேகர், ஆறுமுகம் ராகேஷ் மற்றும் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

புதுச்சேரி:

உப்பளம் தொகுதி குட்பட்ட முஸ்லீம் கல்லரை வீதியில் உள்ள வேதவள்ளி அம்மன் கோவில் மற்றும் நேதாஜி நகரில் உள்ள பாலமுருகன் கோவில் ஆகிய 2 கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது.

இக்கோவில்களின் திருப்பணிகளுக்கு நிதி உதவி அளிக்குமாறு கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்து அறநிலைத்துறை மூலம் 2 கோவில்களுக்கும் தலா ரூ .1 3/4 லட்சம் நிதிக்கான காசோலையை கென்னடி எம்.எல்.ஏ.விடம் வழங்கினார்.

இதனை தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. அந்தந்த கோவில் நிர்வாகிகளிடம் அந்த காசோலையை அளித்தார்.

நிகழ்ச்சியின் போது தொகுதி செயலாளர் சக்திவேல், துணைச் செயலாளர் ராஜி, தி.மு.க. பிரமுகர் நோயல், கிளைச் செயலாளர்கள் செல்வம், சேகர், ஆறுமுகம் ராகேஷ் மற்றும் பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News