புதுச்சேரி

புதுவை அரசில் காலியாக உள்ள 116 மேல்நிலை எழுத்தர் பணிக்கு இன்று தேர்வு நடைபெற்றது. லாஸ்பேட்டை செல்லப்பெருமாள் பேட்டையில் உள்ள விவேகானந்தா பள்ளியில் தேர்வு நடந்த காட்சி.

116 மேல் நிலை எழுத்தர் பணிக்கு இன்று தேர்வு

Published On 2023-07-23 12:17 IST   |   Update On 2023-07-23 12:17:00 IST
  • 113 மையங்களில் நடந்தது.
  • தேர்வு பணியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

புதுச்சேரி:

புதுவை மாநில அரசு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள 116 மேல்நிலை எழுத்தர் பணி யிடங்கள் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதன்அடிப்படையில், புதுவையில் 37 ஆயிரத்து 602, காரைக்காலில் 5 ஆயிரத்து 148, மாகியில் ஆயிரத்து 128, ஏனாமில் 2 ஆயிரத்து 122 பேர் என மொத்தம் 46 ஆயிரம் பேர் விண்ணப்பம் ஏற்கப்பட்டது. இவர்க ளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடந்தது.

தேர்வுக்காக புதுவையில் 107, காரைக்காலில் 13, மாகியில் 5 மற்றும் ஏனாமில் 8 என மொத்தம் 133 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு பணியில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

தேர்வர்கள் தங்கள் நுழைவு சீட்டில் அவர்களது மார்பளவு பாஸ்போர்ட் புகைபடத்தை ஓட்டி கையொப்பமிட்டு கொண்டு வர அறிவுருத்தப்பட்டி ருந்தது. மைய நுழைவு வாயிலில் நுழைவு சீட்டு உள்ளோர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வு அலுவலர்கள் நுழைவு சீட்டுடன் தேர்வர்களின் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், வருமான வரி, பான் கார்டு ஆகிய வற்றுள் ஒன்றின் அசலையும் கேட்டு பெற்று உறுதி செய்தனர்.

தேர்வர்கள் கைப்பைகளை வெளி யில் விட்டு வர அறிவுருத்தப்பட்டனர். கைபேசி, புளு டூத் சாதனங்கள், ஹெட் போன்கள், கால்குலேட்டர்கள், பென் டிரைவ் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வர்களிடம் இவை ஏதும் உள்ளதா? என சோதனை செய்தனர்.

கருப்பு வண்ண பால்பாயிண்ட் பேனா, நுழைவு சீட்டு மற்றும் அசல் அடையாள அட்டை ஆகியவை மட்டுமே தேர்வு அறைக்கு எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

சரியாக காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு தொடங்கிய வுடன் மையத்தின் நுழைவு வாயில் மூடப்பட்டது. அதற்கு பின் காலதாம தமாக வந்தவர்கள் அனுமதிக்கப்பட வில்லை.

அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதியம் 12 மணிக்கு தேர்வு முடிந்தது. விண்ணப்பித்த வர்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதியுள்ளனர்.

தேர்வு நேர்மையாக நடத்தப்பட்டு மெரிட் அடிப்படையிலேயே பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News