புதுச்சேரி

தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் முதல்- அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து முகக்கவசம் கொடுத்த காட்சி.

முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு 1000 முகவசம் வழங்கி பாராட்டிய தொழில்முனைவோர்

Published On 2023-03-21 04:57 GMT   |   Update On 2023-03-21 04:57 GMT
  • புதுவை சட்டசபையில் கடந்த 13-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
  • முதல்-அமைச்சரை சந்திக்க வருபவர்கள் முக கவம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்துவிதமாக ஆயிரம் முக கவசங்களை வழங்கினர்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் கடந்த 13-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

புதுவையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றார். இதற்காக தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் முதல்- அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

கொரோனா நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் முதல்-அமைச்சரை சந்திக்க வருபவர்கள் முக கவம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்துவிதமாக ஆயிரம் முக கவசங்களை வழங்கினர்.

முதல்-அமைச்சர் ரங்கசாமி, தொழில் தொடங்குவோருக்கு பல சலுகை, திட்டங்களை அறிவித்துள்ளார்.

இதனால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், புதுவையின் பொருளாதாரம் உயரும். இதற்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூட்டமைப்பு தலைவர் பாபு கேட்டுக் கொண்டார்.

Tags:    

Similar News