புதுச்சேரி

100 நாள் வேலை வாய்ப்பு பணியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்த காட்சி.

100 நாள் வேலை வாய்ப்பு பணி

Published On 2023-06-10 06:49 GMT   |   Update On 2023-06-10 06:49 GMT
  • அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்
  • அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

புதுச்சேரி:

புதுவை அரசின் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் வாயிலாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பணிகள் தொடக்க விழா  நடைபெற்றது.

விழாவிற்கு உள்துறை அமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏ.வுமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.

விழாவில் காட்டேரிக்குப்பம் கிராமத்தில் பெரிய ஏரியின் தென்கிழக்கு பகுதி தூர்வாரும் பணியினை ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும், தேத்தம்பாக்கம் கிராமத்தில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அய்யனார் கோவில் குளம் தூர்வாருதல், திருக்கனூர் பெரிய ஏரி கிழக்கு பகுதியினை ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் திருக்கனூர் பெரிய ஏரியில் பொது மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள் இலவச அரிசி வழங்க வேண்டும் எனவும், திருக்கனூர் முத்துமாரியம்மன் கோவில் பணிகளை முடித்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் எனவும், திருக்கனூர் பள்ளிக்கூடத்தினை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார்.

பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு முறையாக நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், பிரமுகர்கள் போட்டோ ராஜா, முத்தழகன், உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News