புதுச்சேரி
கோப்பு படம்.

407 ஏழை மணப்பெண்களுக்கு ரூ.1 கோடி திருமண நிதி உதவி

Published On 2023-11-18 08:26 GMT   |   Update On 2023-11-18 08:26 GMT
  • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தகவல்
  • திருமண உதவித் தொகையாக 188 பேருக்கு ரூ.51 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள மணப்பெண்ணின் திருமண உதவித்தொகையாக ரூ.25 ஆயிரம் வீதம் 407 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே ஒரு லட்சத்து 75 ஆயிரம் வழங்கப் பட்டுள்ளது. ஆதரவற்ற விதவைப் பெண் மகள் திருமண உதவித் தொகையாக 188 பேருக்கு ரூ.51 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பெண், 2 பெண் குழந்தை உதவித் தொகையாக 150 பேருக்கு ரூ.45 லட்சம் வைப்புத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஏழை பெற்றோரின் குடும்பத்தில் 8 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் ஒரே பெண் குழந்தைக்கு உதவித் தொகையாக 5 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News