வழிபாடு
சீரடி சாய்பாபா கோவிலில் இரவு நேர தரிசனம் ரத்து
பிரசித்தி பெற்ற புனித தலமான சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் புதிய வகை வைரசான ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக வழிபாட்டு தலங்கள், திருமண விழாக்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பங்கேற்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புனித தலமான சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாவட்ட கலெக்டர் அறிக்கை ஒன்று விடுத்து உள்ளார். அதில், சாய்பாபா கோவிலில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிக்கலாம்...தன்னம்பிக்கை தரும் ஸ்ரீ பைரவர் 108 போற்றி