செய்திகள்

திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் வளாகத்தில் காய்-கனி அலங்காரம்

Published On 2018-09-26 08:20 GMT   |   Update On 2018-09-26 08:20 GMT
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி மூலஸ்தானம் மற்றும் வளாகம் பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலில் புரட்டாசி பவுர்ணமியையொட்டி மூலஸ்தானம் மற்றும் வளாகம் பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணை, குளிர்பானம், இனிப்பு வகைகள் என அனைத்தும் பையில் கட்டி தொங்க விடப்பட்டு நிறைமணி காட்சி நடந்து வருகிறது. தொடர்ந்து இன்று வரை 3 நாட்கள் நடக்கிறது.

நாளை (27-ந் தேதி) கோவிலில் தொங்கவிடப் பட்டுள்ள காய்கறி-கனி உள்ளிட்டவைகளை ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்படும்.

பின்னர் அவை பக்தர் களுக்கு அன்னதானமாக வழங்கப்படும். இதை யொட்டி கடந்த 3 நாட்களாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கோவிலில் தொங்கப்விடப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை செல்போனில் புகைப்படம் எடுத்து சென்றனர். கோவில் இணை கமி‌ஷனர் இரா. வான்மதி, முன்னாள் அறங்காவலர் லயன் டி.ரமேஷ், லயன் ஏ.கே.எஸ்.சரவணன் உள்ளிட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

இது பற்றி பக்தர்கள் கூறும்போது, “நாம் வேண்டியது கிடைக்க வேண்டும், உலகில் உள்ள ஜீவராசிகள் பசி, பட்டினி இல்லாமல் வாழ வேண்டும், மழை, இயற்கை வளங்கள் பெருக வேண்டும், விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இது செய்யப்படுகிறது. இதற்கு சாகம்பரி என்ற பெயரும் உண்டு” என்றனர்.
Tags:    

Similar News