செய்திகள்

வழுதூர் மாரியம்மன் திருவிழாவில் திரளான பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

Published On 2016-08-19 13:50 IST   |   Update On 2016-08-19 13:51:00 IST
ராமநாதபுரம் அருகே வழுதூர் மாரியம்மன் திருவிழாவில் திரளான பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வழிபாடு செய்தனர்.
ராமநாதபுரம் அருகே வழுதூரில் நடந்த முளைப்பாரி திருவிழாவில் மழைவேண்டி சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

வழுதூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு முளைக்கொட்டு உற்சவ விழா காப்புக்கட்டுதலுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை அம்மன் ஆலயத்திற்கு பெண்கள் தலைகளில் சுமந்து ஊர்வலமாக கொண்டு வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

கோவில் பூசாரி துரைராஜ் பெரிய ஊரணி கரையில் கரகம் எடுத்தார் அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி சுமந்து வந்தனர். ஆயிரக்கணக்கான பெண்கள் தலையில் முளைப்பாரிகளை வைத்து மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் கூட்டு பிரார்த்தனை நடத்தினர்

இளைஞர்களின் ஒயிலாட்டம் முளைக்கொட்டு நடைபெற்று முளைப்பாரிகளை வழுதூர் ஊரணியில் கரைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாகிகள் ராஜா, மூர்த்தி, ராஜ கோபால், கனகராஜன், தினகரன், ஜெயபால், துரை, கார்மேகம், மோகன், கோபால், வேலுச்சாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News