செய்திகள்

இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்: விமர்சனத்தால் உடனடியாக நீக்கிய பாகிஸ்தான் வீரர்

Published On 2019-06-21 19:56 IST   |   Update On 2019-06-21 19:56:00 IST
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 9 ஓவரில் 84 ரன்கள் விட்டுக்கொடுத்த ஹசன் அலி, இந்தியாவுக்கு ஆதரவாக ட்விட் செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி 9 ஓவர்கள் வீசி 84 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இரு அணிகளுக்கான உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இதனால் ஹசன் அலிக்கு எதிராக பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதற்கிடையே போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு, இந்திய ரசிகை ஒருவர் வாழ்த்து தெரிவித்ததுடன், இந்தியாவிற்கு உலகக்கோப்பை என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.



அந்த ரசிகையின் ட்விட்டிற்கு ஹசன் அலி ‘‘இந்தியா வெற்றி வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்திருந்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்தனர். இதனால் ஹசன் அலி தனது ட்விட்டை உடனடியாக நீக்கிவிட்டார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு மாறிய போதிலும், ரசிகர்களிடையே வார்த்தை போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

Similar News