செய்திகள்

தவானுக்குப் பதிலாக ரிஷப் பந்தை மாற்று வீரராக சேர்த்துக் கொள்ள ஐசிசி அனுமதி

Published On 2019-06-20 08:36 GMT   |   Update On 2019-06-20 09:23 GMT
காயம் காரணமாக ஷிகர் தவான் விலகியுள்ள நிலையில், ரிஷப் பந்தை மாற்று வீரராக சேர்த்துக் கொள்ள இந்திய அணிக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது.
உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம்பிடித்திருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தின்போது அவருக்கு இடது கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

மூன்று வாரத்திற்குள் காயம் குணமடைந்து விடும் என ஆணி நிர்வாகம் நம்பிக்கையில் இருந்தது. ஆனால், காயம் குணமடைய அவர்கள் எதிர்பார்த்ததை விட கூடுதல் நாட்கள் ஆகும் என டாக்டர்கள் கூறியதால் இந்திய அணியில் இருந்து தவான் விலகியுள்ளார்.

அவருக்குப் பதிலாக ரிஷப் பந்தை அணியில் சேர்த்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ, உலகக்கோப்பை போட்டிக்கான தொழில்நுட்ப கமிட்டியிடம் அனுமதி கோரியிருந்தது.



அக்குழு தவானின் காயம் குறித்த அறிக்கையை நன்கு ஆராய்ந்து, மாற்று வீரராக ரிஷப் பந்தை சேர்த்துக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது. இதனால் ரிஷப் பந்த் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்து, வீரர்கள் அறைகளில் உலாவருவார். ஆனால், ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பாரா? என்பது கேள்விக்குறியே?.
Tags:    

Similar News