செய்திகள்

தசைப்பிடிப்பால் அவதி - அடுத்த 3 போட்டிகளில் புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு

Published On 2019-06-17 05:39 GMT   |   Update On 2019-06-17 05:50 GMT
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்து 3 போட்டிகளில் புவனேஸ்வர் குமார் விளையாட மாட்டார் என விராட் கோலி கூறியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இந்த போட்டியின் போது புவனேஸ்வர் குமாரின் காலின் தொடைப்பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை.



இந்திய அணி டாக்டர் அவருக்கு உடனடி சிகிச்சை அளித்து போட்டிக்கு தயார்படுத்த முயன்றார். ஆனாலும் புவனேஷ்வர் குமாரால் முடியவில்லை. இதனால் அவர் போட்டியில் ஆட மாட்டார் என அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-



பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமாருக்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அடுத்து 2 அல்லது 3 போட்டிகளில் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக முகமது சமி களம் இறங்குவார்.

அடுத்து 3 ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் ஜூன் 22-ம் தேதியும், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 27-ம் தேதியும், இங்கிலாந்து அணியுடன் 30-ம் தேதியும் விளையாட உள்ளது.
Tags:    

Similar News