செய்திகள்

இந்தியாவுக்கு மிகப்பெரிய இழப்பு: புவனேஷ்வர் குமார் பந்து வீச வரமாட்டார் என அறிவிப்பு

Published On 2019-06-16 15:57 GMT   |   Update On 2019-06-16 15:57 GMT
2.4 ஓவர்கள் வீசிய நிலையில் காயத்தால் வெளியேறிய புவனேஷ்வர் குமார் பீல்டிங் செய்ய வரமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் குவித்தது. பின்னர் 337 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது.

ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். 4-வது பந்தை வீசியபோது அவரது காலின் தொடைப்பகுதியில் வலி ஏற்பட்டது. இதனால் அவரால் தொடர்ந்து பந்து வீச முடியவில்லை. ஆகவே 2.4 ஓவர்கள் வீசியதுடன் வெளியேறினார்.

இந்திய அணி டாக்டர் அவருக்கு உடனடி சிகிச்சை அளித்து போட்டிக்கு தயார்படுத்த முயன்றார். ஆனாலும் புவனேஷ்வர் குமாரால் காலை வலிமையாக ஊன்ற முடியவில்லை. இதனால் இன்றைய போட்டியில் அவர் எஞ்சிய ஓவர்களை வீசமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வர் பந்து வீசாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News