உலகம்

 விளாடிமிர் ஜெலன்ஸ்கி

இந்தியா உள்பட 4 நாடுகளுக்கான உக்ரைன் தூதர்கள் பதவி நீக்கம்- ஜெலன்ஸ்கி அறிவிப்பு

Published On 2022-07-09 20:02 GMT   |   Update On 2022-07-09 20:02 GMT
  • ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி நாடுகளுக்கான உக்ரைன் தூதர்கள் நீக்கம்.
  • தூதர்கள் நீக்கம் தொடர்பான காரணங்களை உக்ரைன் அதிபர் தெரிவிக்கவில்லை.

கீவ்:

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 150-வது நாளை நெருங்கியுள்ளது. உக்ரைனின் பல நகரங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது. உக்ரைனுக்கு ராணுவ ரீதியிலான உதவி கிடைக்க சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், ஜெர்மனி, இந்தியா, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரிக்கான உக்ரைன் தூதர்களை பணிநீக்கம் செய்வதாக ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். இதற்கான காரணங்கள் குறித்தும், அவர்களுக்கு வேறு பணிகள் வழங்கப்படுமா என்பது குறித்தும் உக்ரைன் அதிபர் மாளிகை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ராணுவ ரீதியிலான உதவிகளை ஜெர்மனி வழங்கி வரும் நிலையில் அந்நாட்டிற்கான உக்ரைன் தூதரை ஜெலன்ஸ்கி நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News