உலகம்

சிறுத்தையுடன் ஓட்டப்பந்தயம் வைத்து ஓடிய பிரபல யூடியூபர் - வைரல் வீடியோ

Published On 2026-01-06 10:57 IST   |   Update On 2026-01-06 10:57:00 IST
  • உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் ஸ்பீட்
  • ஸ்பீட் ஐஷோஸ்பீட் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

இன்றைய சமூக வலைத்தள பயன்பாடு என்பது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகி விட்டது. சமூக வலைத்தளங்கள் மூலம் நாம் செல்ல முடியாத இடங்கள் குறித்து தெரியாதவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. இதற்காக பலர் யூடிப் சேனல்கள் தொடங்குகின்றனர். இதில் சிலரே மக்கள் மனதில் இடம்பிடித்து நிலைத்து நிற்கின்றனர். அவர்கள் செல்லும் நாடு, ஊர், அனுபவங்கள் குறித்து நேரடியாக ஒளிபரப்பி லைக்குகளை அள்ளுகின்றனர்.

அந்த வகையில், உலகளவில் மிகவும் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களில் ஒருவர் ஸ்பீட். இவர் ஐஷோஸ்பீட் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். உலகளவில் அதிக பாலோயர்ஸ்களை கொண்ட சேனல்களில் ஒன்றாக ஐஷோஸ்பீட் இருக்கிறது.

வித்தியாசமான முறையில் வீடியோக்களை போட்டு பிரபலமான ஸ்பீடு தற்போது சிறுத்தையுடன் ஓட்டப்பந்தயம் வைத்து ஓடிய வீடியோவை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News