உலகம்

நூதன முறையில் கைவரிசை காட்டிய பெண் கொள்ளையர்கள்... சுரங்க ரெயிலில் நடந்த துணிகரம்

Update: 2022-10-05 14:00 GMT
  • காயமடைந்த இரண்டு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதுபோன்ற நடத்தையால் மக்கள் கலக்கம் அடையவில்லை என சமூக வலைத்தளத்தில் ஆதங்கம்

நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலியன்ஸ் உடையணிந்த 6 இளம்பெண்கள் கொண்ட கொள்ளைக் கும்பல் கைவரிசை காட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் டைம்ஸ் சதுக்கம் சுரங்க ரெயிலுக்குள் ஏறிய அந்த பெண்கள் அங்கிருந்த இரண்டு பெண்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பர்ஸ், கிரெடிட் கார்டு, செல்போன் போன்றவற்றை பறித்து சென்றுள்ளனர். காயமடைந்த இரண்டு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏலியன்ஸ் போன்று இறுக்கமான உடை அணிந்த பெண்களின் அடாவடி செயலை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

'நியூயார்க் அதன் பழைய தந்திரங்களுக்குத் திரும்பியுள்ளதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். நியூயார்க் எப்போதும் சிறப்பாக இருக்கிறதா? இதுபோன்ற நடத்தையால் மக்கள் கலக்கம்கூட அடையவில்லை. இது பைத்தியக்காரத்தனம், என ஒருவர் ஆதங்கத்துடன் கூறி உள்ளார்.

Tags:    

Similar News