உலகம்

பிரான்ஸ், ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ: விண்ணை முட்டும் அளவிற்கு எழுந்த புகை

Published On 2022-07-17 03:49 GMT   |   Update On 2022-07-17 03:49 GMT
  • பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
  • மரங்கள் பற்றி எரிவதால் விண்ணை முட்டும் அளவிற்கு புகை எழுந்துள்ளது.

பாரிஸ்:

ஸ்பெயினின் மலாகா பிராந்தியம் மற்றும் தென்மேற்கு பிரான்சில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்தநிலையில், தற்போது காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. மரங்கள் பற்றி எரிவதால் விண்ணை முட்டும் அளவிற்கு புகை எழுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கோடை வெப்பம் தொடர்பாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தீ பரவி வரும் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பெருமளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

பிரான்சின் ஜிரோண்டே பகுதியில் இருந்து சுமார் 14,000 பேர் நேற்று வெளியேற்றப்பட்டனர். அங்கு 1,200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடிவருகின்றனர். 10000 ஹெக்டேர் பரப்பளவில் பரவியிருக்கும் காட்டுத்தீயில், மரங்கள் முற்றிலும் அழிந்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் ஊற்றப்பட்டு காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

Tags:    

Similar News