உலகம்
null

VIDEO: காணாமல் போன சிறுமியின் உடல் மீது கால் வைத்த பத்திரிக்கையாளர் - செய்தி சேகரிக்கும்போது பகீர்

Published On 2025-07-23 03:15 IST   |   Update On 2025-07-23 03:15:00 IST
  • ரைசா என்ற 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
  • அப்போது அவரின் கால்களுக்கு வித்தியாசமாக எதோ தட்டுப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள Bacabal நகரில் Mearim என்ற ஆறு உள்ளது. இந்த பகுதிக்கு அருகில் ரைசா என்ற 13 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். இந்நிலையில் சிறுமி குறித்து செய்தி சேகரிக்க லெனில்டோ ஃபிரசாவோ என்ற பத்திரிக்கையாளர் அங்கு சென்றுள்ளார்.

சிறுமி கடைசியாக காணப்பட்ட இடத்தை விளக்க லெனில்டோ ஆற்றில் இறங்கினார். அப்போது அவரின் கால்களுக்கு வித்தியாசமாக எதோ தட்டுப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னரே அவர் காணாமல் போன சிறுமியின் உடலை மிதித்தது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறுமியின் உடல் அங்கிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

சிறுமி தனது நண்பர்களுடன் நீந்தும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

Tags:    

Similar News