இந்திய வீரர்களை உருகச் செய்யும் மின்காந்த ஆயுதத்தைப் பயன்படுத்திய சீனா - அமெரிக்க செனட்டர் பரபரப்பு
- சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
- இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் நடந்த ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.
ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.
இந்நிலையில் 5 வருடங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்களை உயிருடன் உருகச் செய்யும் மிகவும் ஆபத்தான மின்காந்த ஆயுதத்தை சீனா பயன்படுத்தியதாக அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சி செனட்டர் பில் ஹாகெர்டி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
டென்னசி மாகாண செனட்டர் பில் ஹாகெர்டி பேசுகையில், "சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீண்ட காலமாக மனக்கசப்புகளும் அவநம்பிக்கையும் உள்ளன.
சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவும் இந்தியாவும் ஒரு சர்ச்சைக்குரிய எல்லையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன, அப்போது சீனா இந்திய வீரர்களை உருக்க ஒரு மின்காந்த ஆயுதத்தைப் பயன்படுத்தியது" என்று தெரிவித்தார்.
பெயரை குறிப்பிடவில்லை எனினும், இது 2020 இல் நடந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அவர் மறைமுகமாகக் கூறினார்.