உலகம்

ஜெனரல் மார்க் மில்லி

தைவானை தாக்குவது தவறான பாதைக்கு கொண்டு செல்லும்: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Published On 2022-11-17 22:00 IST   |   Update On 2022-11-17 22:00:00 IST
  • தைவான் ஜலசந்தியின் குறுக்கே தைவானை தாக்குவது கடினமாகும்.
  • தைவான் மீதான தாக்குதல் ஒரு புவிசார் அரசியல் பிழையாக இருக்கும்.

தைவானை சீனா தனது நாட்டின் ஒரு பகுதியாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி நிருபர்களிடம் கூறியதாவது:-

தைவானின் பெரும்பகுதி மலைப்பாங்கான தீவு ஆகும். எனவே தைவான் ஜலசந்தியின் குறுக்கே தைவானை தாக்குவது கடினமாகும். இதில் சீனர்களுக்கு அதிக ஆபத்தும் இருக்கும். தைவான் மீதான தாக்குதல் ஒரு புவிசார் அரசியல் பிழையாக இருக்கும். தைவானை சீனா தாக்கினால் அது உக்ரைனில், ரஷியா செய்ததை போன்று ஒரு தவறான பாதையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

Similar News