உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: காரணத்திற்காகவே என் உயிரை கடவுள் காப்பாற்றினார்.. டொனால்டு டிரம்ப்

Published On 2024-11-06 06:46 IST   |   Update On 2024-11-06 17:36:00 IST
2024-11-06 04:38 GMT

டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியாவில் கமலா ஹாரிஸ் 92.4 சதவீதம் வாக்குள் பெற்று வெற்றி பெற்றார். டிரம்ப் 6.7 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றார். இங்கு 3 எலக்டோரல் வாக்குகள் உள்ளன.

2024-11-06 04:30 GMT

இந்திய நேரப்படி காலை 10 மணி வரை டொனால்டு டிரம்ப் 5,62,24,512 (51.7%) வாக்குகளும், கமலா ஹாரிஸ் 5,11,36,223 (47%) வாக்குகளும் பெற்றுள்ளனர்.

2024-11-06 04:28 GMT

ஒரிகன் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இங்கு 8 எலக்டோரல் வாக்குகள் உள்ளன. கமலா ஹாரிஸ் 55.2 சதவீத வாக்குகள் பெற்றார்.

2024-11-06 04:25 GMT

ஐடாகோ மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இங்கு 4 எலக்டோரல் வாக்குகள் உள்ளன.

2024-11-06 04:06 GMT

54 எலக்டோரல் வாக்குகள் கொண்ட கலிபோர்னியாவில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றார். 12 எலக்டோரல் வாக்குகள் கொண்ட வாஷிங்டனிலும் வெற்றி பெற்றார். இரண்டு மாகாணங்களில் 66 வாக்குகளை பெற்றார்.

2024-11-06 04:02 GMT

பென்சில்வேனியாவில் தொடக்கத்தில் கமலா ஹாரிஸ் முன்னிலைப் பெற்ற நிலையில் தற்போது டொனால்டு டிரம்ப் முன்னிலைப் பெற்றுள்ளார்.

2024-11-06 03:32 GMT

28 எலக்டோரல் வாக்குகளை கொண்ட நியூயார்க்கில் கமலா ஹாரிஸ் 58.8 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிரம்ப் 41.2 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளார்.

2024-11-06 03:30 GMT

கமலா ஹாரிஸ் இதுவரை 10 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். டொனால்டு டிரம்ப் 20 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

2024-11-06 03:17 GMT

இந்திய நேரப்படி காலை 8.45 நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 198 எலக்டோரல் வாக்குகளும், கமலா ஹாரிஸ் 109 எலக்டோரல் வாக்குகளும் பெற்றுள்ளனர்.

2024-11-06 03:14 GMT

கொலராடோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இங்கு 10 எலக்ட்டோரல் வாக்குகள் உள்ளன.

Tags:    

Similar News