உலகம்

அமெரிக்கா, இலங்கை கொடிகள்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கா

Published On 2022-06-26 01:16 GMT   |   Update On 2022-06-26 01:16 GMT
  • அமெரிக்காவின் உயர்மட்டக்குழு இன்று இலங்கை வருகிறது.
  • ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது.

கொழும்பு:

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா கடனுதவி, எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த வரிசையில் அமெரிக்காவும் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், அமெரிக்க உயர்மட்டக்குழு இன்று கொழும்பு வருகிறது.

ஆசியாவுக்கான கருவூலத்துறை துணை உதவிச்செயலாளர் ராபர்ட் கப்ரோத், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான துணை உதவி செயலாளர் கெல்லி கெய்டர்லிங் உள்ளிட்டோர் அடங்கிய இந்த குழுவினர் 29-ந்தேதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர்.

அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்பட அரசு உயர்மட்ட தலைவர்களை அவர்கள் சந்தித்து பேசுகின்றனர். அத்துடன் அந்நாட்டின் பல்வேறு அரசியல் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் அமெரிக்க குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்தும், எதிர்காலத்தில் நிலையான வளர்ச்சிக்கு திட்டமிடுவது குறித்தும் விவாதிக்க உள்ளனர். இதேபோல் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பும் இலங்கைக்கு உதவ முன் வந்துள்ளது.

Tags:    

Similar News