உலகம்

டெனிஸ் ரிச்சர்ட்ஸ்

லாஸ் ஏஞ்சல்சில் நடிகை டெனிஸ் ரிச்சர்ட்ஸ், அவரது கணவர் மீது துப்பாக்கி சூடு

Published On 2022-11-16 20:02 IST   |   Update On 2022-11-16 20:02:00 IST
  • பார்க்கிங் செய்ய இடத்தை தேர்வு செய்வதற்காக காரை நிறுத்தியபோது தாக்குதல்
  • இந்த சம்பவம் தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவின் பிரபல நடிகையும் முன்னாள் மாடல் அழகியுமான டெனிஸ் ரிச்சர்ட்ஸ் தனது கணவர் ஆரோன் பைப்பர்சுடன் காரில் ஸ்டுடியோவுக்கு சென்றபோது அவர்கள் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒரு சாலையோரம் காரை பார்க்கிங் செய்யும் இடத்தை தேர்வு செய்வதற்காக காரை நிறுத்தியிருக்கிறார்கள். அப்போது பின்னால் நின்றிருந்த காரில் இருந்த நபர், எரிச்சலைந்து கத்தத் தொடங்கினார். அத்துடன் நடிகையின் காருக்கு முன்னால் தனது காரை கொண்டு வர முயற்சித்துள்ளார். அப்போது நடிகையின் கணவர் ஆரோன், வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறார்.

எனினும் ஆத்திரத்தில் அந்த நபர் துப்பாக்கியால் நடிகையின் காரை நோக்கி சுட்டுள்ளார். இதில் காரில் குண்டு துளைத்தது. காருக்குள் இருந்த நடிகையும், அவரது கணவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News