உலகம்

அதிபர் ஜோ பைடன்

அதிபர் ஜோ பைடனின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் ரத்து - வெள்ளை மாளிகை

Published On 2023-05-17 03:15 IST   |   Update On 2023-05-17 03:29:00 IST
  • ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் மே 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 உச்சி மாநாடு நடக்கிறது.
  • அதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

வாஷிங்டன்:

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் மே 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஜி7 குழும (வளர்ந்த நாடுகள்) வருடாந்திர உச்சி மாநாடு நடக்கிறது. அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜி7 மாநாட்டுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, மோடி பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில், கடன் நெருக்கடிக்கு மத்தியில் ஜி-7க்கு பிந்தைய ஆசிய சுற்றுப்பயணத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்து செய்தார். அவர் அவர் குவாட் மாநாட்டுக்கு ஆஸ்திரேலியா செல்லமாட்டார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News