உலகம்
உக்ரைன் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் சுட்டுக்கொலை
- ஆண்ட்ரி கொலைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
- கொலையாளிகளை பிடிக்க அனைத்து விசாரணை அமைப்புகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
உக்ரைன் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரி வேலோடிமிரோவிச் பருபிய் (வயது 53). இவர் 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை சபாநாயகராக செயல்பட்டார்.
இந்த நிலையில் ஆண்ட்ரி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். லிவீவ் மாகாணம் பிராங்க்ஸ்வி பகுதியில் ஆண்ட்ரி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொன்று விட்டு தப்பி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். ஆண்ட்ரி கொலைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க அனைத்து விசாரணை அமைப்புகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். ரஷியா-உக்ரைன் இடையேயான போர் நீடித்து வரும் நிலையில் இரு நாடுகளிலும் முக்கிய அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.