உலகம்

அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மற்றும் அரசு வழக்கறிஞர் பணிநீக்கம் - அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவு

Published On 2022-07-18 00:09 GMT   |   Update On 2022-07-18 00:09 GMT
  • உக்ரைன் பாதுகாப்பு படையின் உளவுப்பிரிவு தலைவரை பணிநீக்கம் செய்யப்பட்டார்.
  • இதேபோல் அந்நாட்டு அரசு வழக்கறிஞரும் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

கீவ்:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 5 மாதத்தை நெருங்கியுள்ளது. இந்தப் போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. உக்ரைனுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் விதித்துள்ளன.

இதனிடையே, உக்ரைனில் ஆக்கிரமித்த பகுதிகளை ரஷியா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் மற்றும் அரசு பொது வழக்கறிஞர் ஆகியோரை பணிநீக்கம் செய்து அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டுள்ளார். அரசு பொது வழக்கறிஞரின் அலுவலகங்களில் பணியாற்றி வருபவர்கள், உக்ரைன் உளவுப்பிரிவு தலைவர் உள்பட மூத்த அதிகாரிகளை அதிபர் ஜெலன்ஸ்கி பணிநீக்கம் செய்துள்ளார்.

இந்த இரு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள், வீரர்கள் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அந்தப் பிரிவுகளின் தலைவர்களை நீக்கியுள்ளார்.

Tags:    

Similar News