உலகம்

38,000 அடி உயரத்தில் Turbulence.. பயணிகள் விமானம் அவசர தரையிறக்கம் - 25 பேர் மருத்துவமனையில் அனுமதி

Published On 2025-08-01 06:59 IST   |   Update On 2025-08-01 06:59:00 IST
  • விமானம் 90 வினாடிகளில் 38,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து 35,775 அடிக்கு கீழே இறங்கியது.
  • சுமார் 9 மணி நேர பயணத்தில், 2 மணி நேரம் கடந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவில் சால்ட் லேக் நகரில் இருந்த ஆம்ஸ்டர்டாமிற்குச் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் டர்புலன்ஸ் (turbulence) காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை, 275 பயணிகள் மற்றும் 13 விமானக் குழுவினருடன் சென்ற இந்த விமானம், நடுவானில் காற்று அலைகளால் தடுமாற தொடங்கிய நிலையில் மினியாபோலிஸ்-செயின்ட் பால் சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

Flightradar24 என்ற விமான கண்காணிப்பு வலைத்தளத்தின் தரவுகளின்படி, விமானம் 90 வினாடிகளில்38,000 அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து 35,775 அடிக்கு கீழே இறங்கியது.

சுமார் 9 மணி நேர பயணத்தில், 2 மணி நேரம் கடந்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் மினியாபோலிஸில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

அங்கு மருத்துவக் குழுவினர் பயணிகளுக்கும் விமானக் குழுவினருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். அவர்களில் 25 பேர் உள்ளூர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். 

Tags:    

Similar News