உலகம்

போரில் ரஷியாவின் முக்கிய தளபதியை வீழ்த்தியது உக்ரைன்..!

Published On 2025-07-03 21:10 IST   |   Update On 2025-07-03 21:10:00 IST
  • குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள சுமியில் சண்டை நடைபெற்று வருகிறது.
  • படை வீரர்களை சந்திக்கும்போது கொல்லப்பட்டதாக தகவல்.

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எல்லையில் உள்ள சுமி பிராந்தியத்தின் அருகே உள்ள குர்ஸ்க் பகுதியில் சண்டை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இருநாட்டு வீரர்களும் நேருக்குநேர் மோதிக்கொள்ளும் வகையில் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷியாவின் கப்பற்படை துணைத் தளபதி மேஜர் ஜெனரல் மிக்கைல் குட்கோவ், சண்டை நடைபெறும் இடத்தை பார்வையிட சென்றுள்ளார். அப்போது சண்டைக்கான பணியில் ஈடுபட்டபோது கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த விளக்கத்தை ரஷிய ராணுவம் வெளியிடவில்லை. குட்கோவ் கடந்த மார்ச் மாதம் கடற்படைத் தளபதியின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, கடற்படையின் 155வது படைப்பிரிவின் தளபதியாக இருந்தார்.

Tags:    

Similar News