உலகம்

வீட்டில் தயாரிக்கும் உணவுக்கு கணவரிடம் பணம் வசூலிக்கும் பெண்

Published On 2025-07-25 12:40 IST   |   Update On 2025-07-25 12:40:00 IST
  • வேறு எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் இந்த பணத்தை வேறு ஒருவருக்கு கொடுக்கப்போகிறார்.
  • தங்கள் துணையிடம் அன்புக்கும், சமையலுக்கும் விலையை நிர்ணயிக்கக்கூடாது என சிலர் பதிவிட்டனர்.

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்காக தினமும் தயார் செய்யும் மதிய உணவுக்காக அவரிடம் நாள்தோறும் ரூ.1,160 வசூலிப்பதாக தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், என் கணவர் வேலைக்கு செல்லும் போது, அவருக்கு மதிய உணவு சமைத்து கொடுக்கிறேன். இதற்காக ஒரு நாளைக்கு 10 பவுன்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.1,160 ) வசூலிக்கிறேன்.

அவர் வேறு எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் இந்த பணத்தை வேறு ஒருவருக்கு கொடுக்கப்போகிறார். அதற்கு பதிலாக ஏன் எனக்கு தரக்கூடாது? என கேள்வி எழுப்பி இருந்தார். அவரின் இந்த வீடியோ வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். தங்கள் துணையிடம் அன்புக்கும், சமையலுக்கும் விலையை நிர்ணயிக்கக்கூடாது என சிலர் பதிவிட்டனர்.

Tags:    

Similar News