அமெரிக்காவில் கடையில் திருடிவிட்டு தப்பியபோது கண்ணாடி கதவில் மோதி விழுந்த திருடன்
- சுத்தமாக பளிச்சென்று இருந்த கண்ணாடி ஜன்னலை திறந்தவெளி என நினைத்துள்ளான் திருடன்
- அவனது வயது 17 என்பதால அவனைப்பற்றிய விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் பெல்லீவ் நகரில் உள்ளது லூயிஸ் உய்ட்டன் ஸ்டோர். இங்கு விதவிதமான ஹேண்ட்பேக்குகள், டிராலி பேக் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சம்பவத்தன்று இங்கு ஹேண்ட்பேக் வாங்குவது போன்று வந்த ஒரு இளைஞன் திடீரென விலை உயர்ந்த ஹேண்ட்பேக்குகளை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தான்.
அப்போது சுத்தமாக பளிச்சென்று இருந்த கண்ணாடி ஜன்னலை திறந்தவெளி என நினைத்த அந்த இளைஞன், வெளியே குதித்து தப்புவதற்காக அந்த பகுதியை நோக்கி வேகமாக ஓடினான். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த ஜன்னல் கண்ணாடியில் மோதி கீழே விழுந்தான். உடனடியாக அவனை காவலாளி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அவனது வயது 17 என்பதால அவனைப்பற்றிய விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை.
திருடன் ஜன்னல் கண்ணாடி மீது மோதி விழும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.