உலகம்

ஏரிக்குள் விழுந்து மூழ்கிய விமானம்

null

விமானம் ஏரிக்குள் விழுந்த விபத்தில் 19 பேர் உயிரிழப்பு

Published On 2022-11-06 16:28 GMT   |   Update On 2022-11-06 16:31 GMT
  • மழை பெய்து கொண்டிருந்தபோது விமானம் ஏரிக்குள் விழுந்து மூழ்கியது.
  • 26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்

டார் எஸ் சலாம்

தான் சானியாவில் நாட்டில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து வட மேற்கு நகரமான புகோபா நோக்கி சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் உட்பட மொத்தம் 43 பேர் இருந்தனர்.

புகோபாவை விமானம் நெருங்கிய நிலையில் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டு விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது மழை பெய்துக் கொண்டிருந்ததால் விமானம் தண்ணீருக்குள் முழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்து விட்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின.

26 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது  உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது என தான் சானியா பிரதமர் காசிம் மஜலிவா தெரிவித்துள்ளார். விமானம் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்த போது, மோசமான வானிலையால் விபத்தை சந்தித்தது என்று போலீஸ் கமாண்டர் வில்லியம் மவாம்பகலே தெரிவித்தார்.

Tags:    

Similar News