உலகம்
வாஷிங்டன் நினைவு சின்னத்திற்கு முன்பு பரத நாட்டியம் ஆடிய இளம்பெண்
- சுற்றியுள்ள கூட்டம் கை தட்டி சுவாதியை உற்சாகப்படுத்துவதையும் காண முடிகிறது.
- சுவாதியின் நடனத்திற்காக அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
மேடைகள், கோவில்கள், முக்கிய நிகழ்ச்சிகள் என பல இடங்களில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் பெண்கள் நடனமாடுவதை பார்க்க முடியும். ஆனால் வாஷிங்டனில் உள்ள நினைவு சின்னம் முன்பு ஒரு பெண் பரத நாட்டியம் ஆடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
அதில் சுவாதி ஜெய்சங்கர் என்ற பெண் பாரம்பரிய முறைப்படி பரத நாட்டியம் ஆடுவதையும், அவரை சுற்றியுள்ள கூட்டம் கை தட்டி சுவாதியை உற்சாகப்படுத்துவதையும் காண முடிகிறது. அவரது இந்த நடன வீடியோ இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் பலரும் சுவாதியின் நடனத்திற்காக அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.