உலகம்

18 மணி நேரம் காத்திருந்து விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்த வாலிபர்

Published On 2023-06-29 12:49 IST   |   Update On 2023-06-29 12:49:00 IST
  • பில் ஸ்ட்ரிங்கர் மட்டும் விமான நிலையத்திலேயே காத்திருந்தார்.
  • விமானம் புறப்படுவதற்கு முன்பு இறுதி நேரத்தில் யாராவது வருவார்கள் என எதிர்பார்த்தேன்.

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவை சேர்ந்தவர் பில் ஸ்ட்ரிங்கர். இவர் ஒக்லஹோமா சிட்டியில் இருந்து வட கரோலினாவின் சார்லோட் வரை விமானத்தில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்திருந்தார்.

அதன்படி அவர் விமான நிலையம் வந்த போது குறிப்பிட்ட விமானம் தாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த விமானத்தில் செல்வதற்கு பயணிகள் விமான நிலையத்திலேயே காத்திருந்தனர். ஆனால் சிறிது நேரம் கழித்து மற்றொரு அறிவிப்பு வெளியானது. அதில் விமானம் 18 மணி நேரம் தாமதமாக வரும் என கூறப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

ஆனால் பில் ஸ்ட்ரிங்கர் மட்டும் விமான நிலையத்திலேயே காத்திருந்தார். பின்னர் 18 மணி நேரம் கழித்து வந்த விமானத்தில் அவர் மட்டும் ஏறி பயணம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்துள்ளார். அதில் விமானம் புறப்படுவதற்கு முன்பு இறுதி நேரத்தில் யாராவது வருவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் யாரும் வரவில்லை. இதனால் விமானத்தில் தன்னந்தனியாக பயணம் செய்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. 18 மணி நேர காத்திருப்புக்கு கிடைத்த பரிசாக, விமான பணிப்பெண்கள் மற்றும் ஊழியர்கள் என்னை மரியாதையாக நடத்தினார்கள். எனக்காகவே அளிக்கப்பட்ட 'பர்சனல் பார்ட்டி' போல இந்த பயணம் இருந்தது என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News