உலகம்

ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 10 பேர் பலி

Published On 2022-07-08 07:09 GMT   |   Update On 2022-07-08 11:02 GMT
  • கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் பெய்த கனமழையால் 280-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதமடைந்தன.
  • ஒன்பது மாகாணங்களில் உள்ள மற்ற முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக இரண்டு குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வெள்ளத்தில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறிப்பாக, கிழக்கு நங்கர்ஹார், நூரிஸ்தான் மற்றும் கானி மாகாணங்கள் மற்றும் நாட்டின் வடக்கே பர்வானில் அதிக உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் பதிவாகியுள்ளதாக ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் பெய்த கனமழையால் 280-க்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையாக சேதமடைந்தன. அத்துடன் நான்கு பாலங்கள் மற்றும் எட்டு கிலோமீட்டர் தொலைவு சாலை உள்பட ஒன்பது மாகாணங்களில் உள்ள மற்ற முக்கியமான உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

கடந்த, ஜூன் மாதத்தில் இரண்டு நாட்களில் பெய்த கனமழையில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 131 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News