உலகம்

நீரில் மூழ்கிய பார்வையற்ற நாயை காப்பாற்றிய போலீசார்: வீடியோ வைரலாகி பாராட்டுக்கள் குவிகிறது

Published On 2023-11-08 16:39 IST   |   Update On 2023-11-08 16:39:00 IST
  • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் போலீசாரின் விரைவான செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
  • ஒரு பயனர், பாதிக்கப்பட்டது நாய் குட்டியாக இருந்தாலும், அதனை காப்பாற்றிய அதிகாரிகள் மிகவும் மரியாதைக்குரியவர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

நியூயார்க்கின் குயின்சில் உள்ள பூங்கா ஒன்றில் சிறிய குளம் ஒன்று உள்ளது. அதில் ஏராளமான வண்ண, வண்ண செடிகள் பூத்து குலுங்குகின்றன. இந்த செடிகள் நிறைந்த குளத்தில் பார்வையற்ற நாய் ஒன்று தவறி விழுந்துள்ளது. இதனால் அந்த நாய் நீரில் சிக்கி தவிப்பதை பார்த்த பூங்கா ஊழியர்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு விரைந்து சென்று செடிகளுக்குள் சிக்கி தவித்த பார்வையற்ற நாயை போராடி மீட்டனர். இதுதொடர்பான வீடியோ பேஸ்புக் பக்கத்தில் வெளியானது. இதனை பார்த்த பயனர்கள் பலரும் போலீசாரின் விரைவான செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், பாதிக்கப்பட்டது நாய் குட்டியாக இருந்தாலும், அதனை காப்பாற்றிய அதிகாரிகள் மிகவும் மரியாதைக்குரியவர்கள், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பயனர், அருமையான வேலை. அந்த நாய் விரைவில் குணமடையும் என்று நம்புகிறேன் என கூறி உள்ளார். இதே போன்று ஏராளமான பயனர்களும் போலீசாரின் செயலை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News