உலகம்

மின்மினிப் பூச்சிகளை பார்க்கும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம் - நிபுணர்கள் எச்சரிக்கை

Published On 2025-06-12 13:09 IST   |   Update On 2025-06-12 13:09:00 IST
  • பூச்சிக்கொல்லி காரணமாக மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது
  • மின்மினிப்பூச்சிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 1-2% குறைந்து வருகிறது.

இரவு நேரத்தில் ஒளிரும் மின்மினி பூச்சிகளை யாருக்கு தான் பிடிக்காது. கோடைக்காலம் தொடங்கிவிட்டது என்பதை மின்மினிப்பூச்சிகள் ஒளிர்வதை வைத்து அறிந்துகொள்ள முடியும்.

இந்நிலையில், வாழ்விட இழப்பு, ஒளி மாசுபாடு மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு காரணமாக மின்மினிப் பூச்சிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மின்மினிப்பூச்சிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 1-2% குறைந்து வருவதால் இரவில் மின்மினிப்பூச்சிகள் எரிவதைக் காணும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News