உலகம்

38 பேர் உயிரிழந்த அஜர்பைஜான் விமான விபத்துக்கு ரஷியா தான் காரணம் - ஒப்புக்கொண்ட புதின்!

Published On 2025-10-09 21:00 IST   |   Update On 2025-10-09 21:00:00 IST
  • ரஷியாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க முயன்றதில் விபத்து ஏற்பட்டதாக அஜர்பைஜான் குற்றம்சாட்டியது.
  • இந்த விபத்து தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடர அசர்பைஜான் தயாராகி வருவதாக அலியேவ் ஜூலையில் அறிவித்திருந்தார்.

2024 டிசம்பர் 25 அன்று, பாகுவிலிருந்து குரோஸ்னிக்குச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம், கஜகஸ்தானின் அக்தாவுக்கு அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் உட்பட 38 பேர் உயிரிழந்தனர்.

ரஷியாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க முயன்றதில், விபத்து ஏற்பட்டதாக அஜர்பைஜான் அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் ரஷியாவின் விமானத் தற்காப்பு அமைப்பே அஜர்பைஜான் பயணிகள் விமானத்தை தவறுதலாக தாக்கியதாக ரஷிய அதிபர் புதின் ஒப்புக்கொண்டார்.

தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெறும் முன்னாள் சோவியத் நாடுகளின் மாநாட்டில், அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் சந்திப்பில், விமான விபத்துக்கு ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள்தான் காரணம் என ஒப்புக்கொண்ட புதின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்த விபத்து தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றங்களில் வழக்குத் தொடர அஜர்பைஜான் தயாராகி வருவதாக அலியேவ் கடந்த ஜூலையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் புதின் தற்போது வெளிப்படையாக தவறை ஒப்புக்கொண்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது. 

Tags:    

Similar News