உலகம்

போப் பிரான்சிஸ் மறைவு - இரங்கல் செய்தியை நீக்கி இஸ்ரேல் சர்ச்சை

Published On 2025-04-23 15:53 IST   |   Update On 2025-04-23 15:53:00 IST
  • போப் பிரான்சிஸ், சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்.
  • போப் பிரான்ஸ் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இதுவரை வெளிப்படையான எந்த இரங்கள் செய்தியும் வெளியிடவில்லை.

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் ஈஸ்டர் திங்கள் (ஏப்ரல் 21) அன்று காலை தனது 88 வது வயதில் காலமானார். அவரின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் போப் பிராசிஸ் மறைவுக்கு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் நீக்கியுள்ளது.

"போப் பிரான்சிஸ், சாந்தியடையட்டும். அவரது நினைவு ஒரு ஆசீர்வாதமாக இருக்கட்டும்" என்று வெளியிட்ட பதிவை இஸ்ரேல் நீக்கியுள்ளது கத்தோலிக்க நாடுகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. போப் பிரான்ஸ் மறைவுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இதுவரை வெளிப்படையான எந்த இரங்கள் செய்தியும் வெளியிடவில்லை.

மறைந்த போப் பிரான்சிஸ் காசா - இஸ்ரேல் போரை தொடர்ந்து விமர்சித்து வந்தார். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் என்றும் தனது கடைசி ஈஸ்டர் செய்தியிலும் போப் பிரான்சிஸ் வலியுறுத்தினார். அதே நேரம் இஸ்ரேல் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News