உலகம்

ஐ.எம்.எஃப். ஆலோசனைகளை அமல்படுத்த 2 முதல் 3 வருடங்கள் ஆகும்: பாகிஸ்தான் மந்திரி

Published On 2024-04-16 11:21 GMT   |   Update On 2024-04-16 11:21 GMT
  • பாகிஸ்தானுக்கு அதிகப்படியான கொள்கை பரிந்துரைகள் தேவையில்லை.
  • தற்போது தெரிவித்துள்ள கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்.

பாகிஸ்தான் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. தற்போது அமைந்துள்ள புதிய அரசு பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவிகளை நாடி வருகிறது.

பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக கட்டமைப்பு மறுசீரமைப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த 2 முதல் மூன்று வருடங்கள் ஆகும் என பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.

தற்போது அமெரிக்கா சென்றுள்ள முகமது அவுரங்கசீப் உலக வங்கி குழு மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுடன் புதிய கடன் பெறுவது தொடர்பான ஆலோசனை பங்கேற்க உள்ளார்.

இந்த நிலையில்தான் ஐ.எம்.எஃப். ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து முகமது அவுரங்கசீப் கூறியதாவது:-

பாக்கிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஒரு பெரிய மற்றும் நீண்ட திட்டத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஏனெனில் எங்களுக்கு கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் தேவை.

ஐ.எம்.எஃப். உடன் 24 திட்டங்களில் பாகிஸ்தான் நுழைந்துள்ளது. கட்டமைப்பு சீரமைப்பு நோக்கி செல்லாவிட்டால் நாடு மற்றொரு திட்டத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கும்.

இந்த அம்சங்களின் செயல்பாட்டினை நாம் உண்மையில் நகர்த்தத் தொடங்குவதற்கான நேரம் இது. ஒரு பெரிய மற்றும் நீட்டிக்கப்பட்ட திட்டத்தைத் தேடுகிறோம். எனவே நாங்கள் செயல்படுத்தியவுடன், கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு இரண்டு முதல் மூன்று வருட கால அவகாசம் தேவைப்படும்.

பாகிஸ்தானுக்கு அதிகப்படியான கொள்கை பரிந்துரைகள் தேவையில்லை. தற்போது தெரிவித்துள்ள கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் நகரத் தொடங்க வேண்டிய நேரம் இது.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு சரியான முடிவுகள், சரியான நேரத்தில் செயல்படுத்துதல் தேவை, ஏனெனில் செயல்படுத்தாமல் எந்த மூலோபாயமும் செயல்படாது.

இவ்வாறு அவுரங்கசீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிட்டத்தட்ட அனைத்து பெரிய பொருளாதார இலக்குகளையும் இழக்கும் அபாயத்தை உலக வங்கி சுட்டிக்காட்டியிருக்கிறது. மேலும் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் எச்சரித்தனர்.

Tags:    

Similar News