உலகம்

எஃகு ஆலை திட்டத்தை மீண்டும் தொடங்க பாகிஸ்தான்- ரஷியா இடையே ஒப்பந்தம் கையெழுத்து

Published On 2025-07-12 17:07 IST   |   Update On 2025-07-12 17:07:00 IST
  • 1971 ஆம் ஆண்டு முன்னாள் சோவியத் யூனியனின் உதவியுடன் பாகிஸ்தான் எஃகு ஆலை முதலில் கட்டப்பட்டது.
  • 2008ஆம் ஆண்டு இந்த ஆலை சரிவை சந்தித்தது.

பாகிஸ்தான் எஃகு ஆலையை மீண்டும் தொடங்கவும், நவீனப்படுத்தவும் பாகிஸ்தான்- ரஷியா இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சோவியத் யூனியன் உதவியுடன கட்டப்பட்ட பாகிஸ்தான் எஃகு ஆலை ஒப்பந்தத்திற்காக சீனாவும் போட்டியிட்டது. ஆனால் மாஸ்கோவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான்- ரஷியா இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தத் திட்டம் எஃகு உற்பத்தியை மீண்டும் தொடங்கி விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும், இது இருதரப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

1971 ஆம் ஆண்டு முன்னாள் சோவியத் யூனியனின் உதவியுடன் பாகிஸ்தான் எஃகு ஆலை முதலில் கட்டப்பட்டது. பின்னர் 2008ஆம் ஆண்டு இந்த ஆலை சரிவை சந்தித்தது.

Tags:    

Similar News