உலகம்

ஜெர்மனியில் விமான நிலையம் அருகே டிரோன் பறந்ததால் 17 விமானங்கள் ரத்து

Published On 2025-10-04 05:15 IST   |   Update On 2025-10-04 05:15:00 IST
  • ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலும் டிரோன்கள் பறந்தன.
  • இந்த டிரோன்கள் ரஷியாவுக்கு சொந்தமானது என குற்றம் சாட்டப்பட்டது.

பெர்லின்:

டென்மார்க், போலந்து நாடுகளின் எல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிரோன்கள் கண்டறியப்பட்டன. இதனால் அந்த விமான நிலையங்களை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த டிரோன்கள் ரஷியாவுக்கு சொந்தமானது என குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா தரப்பில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது ஜெர்மனியின் முனிச் விமான நிலையத்திலும் டிரோன்கள் பறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் விமான நிலையம் மூடப்பட்டதால் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 15 விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதனால் சுமார் 3 ஆயிரம் பயணிகள் அவதியடைந்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து டிரோன்கள் பறக்கும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில மணி நேரங்களுக்கு பிறகு விமான நிலையம் திறக்கப்பட்டு விமான சேவை தொடங்கியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News