உலகம்

மெக்சிகோ டு நியூயார்க்: படிப்புக்காக ஒவ்வொரு வாரமும் 3,380 கி.மீ. பயணம் செய்யும் சட்டக்கல்லூரி மாணவி

Published On 2025-04-12 12:03 IST   |   Update On 2025-04-12 12:03:00 IST
  • செடிலோவும் அவரது கணவர் சாண்டியாகோவும் அமெரிக்காவில் தங்கள் புரூக்ளின் வாழ்க்கையை விட்டுவிட்டு வெளியேறினர்.
  • செடிலோ போன்றோரின் நெடும்பயணங்கள் நவீன இது சூப்பர்-கம்யூ என்று குறிப்பிடப்படுகிறது.

பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது ஔவை மொழி. நவீன காலத்தில் அது வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. அந்த வகையில் 30 வயதான நாட் செடிலோ என்ற சட்டக்கல்லூரி மாணவி படிப்புக்காக வாரம் 3,380 கிமீ விமானத்தில் பயணித்து படித்து வருகிறார்.

மெக்சிகோ நாட்டில் வசிக்கும் அவர் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொரு வாரமும் மான்ஹாட்டனுக்கு விமானத்தில் செல்கிறார்.

தி நியூயார்க் போஸ்ட் செய்தியின்படி, செடிலோ திங்கள்கிழமை அதிகாலை மெக்சிகோவிலிருந்து விமானத்தில் ஏறி அமெரிக்காவில் வகுப்புகளை முடித்து செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்புகிறார். நியூயார்க்கின் ஒரு பிரபல சட்டக் கல்லூரியில் தனது இறுதி செமஸ்டரை முடிக்க அவரின் இந்த பயணம் அவசியமாகிறது.

கடந்த ஆண்டு, செடிலோவும் அவரது கணவர் சாண்டியாகோவும் அமெரிக்காவில் தங்கள் புரூக்ளின் வாழ்க்கையை விட்டுவிட்டு மெக்சிகோவில் சிறந்தவ வானிலை மற்றும் மலிவு வாழ்க்கைச் செலவு காரணமாக ஈர்க்கப்பட்டு அங்கு சென்றனர். ஆனால் அவர் தனது சட்டக் கல்வியை விட்டுவிட விரும்பாமல் ஒவ்வொரு வாரமும் நெடும்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

ஜனவரி முதல், செடிலோ 13 வாரங்களில் விமானங்கள், உணவு மற்றும் குறுகிய கால தங்கத்திற்காக 2,000 டாலர் (₹1.7 லட்சம்) செலவிட்டுள்ளார். ஒவ்வொரு  முறையும் 3,380 கிமீ பயணித்து படித்துவிட்டு  அவர் வீடுதிரும்புகிறார். சோர்வு இருந்தபோதிலும், அந்த அனுபவத்தை அவர் மதிப்புக்குரியது என்று அவர் குறிப்பிடுகிறார். செடிலோ போன்றோரின் நெடும்பயணங்கள் நவீன இது சூப்பர்-கம்யூட்டிங் என்று குறிப்பிடப்படுகிறது. 

Tags:    

Similar News