உலகம்

ஆபரேஷன் சிந்தூரில் தலைவர் மசூத் அசாரின் குடும்பம் சிதைந்துபோனது: ஜே-இ-எம் கமாண்டர்

Published On 2025-09-16 19:19 IST   |   Update On 2025-09-16 19:19:00 IST
  • பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்.
  • பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத முகாம் மீதும் தாக்குதல் நடத்தியது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அதில் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் முகாமும் ஒன்று.

இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைபின் கமாண்டர் இல்யாஸ் காஷ்மீரி, இந்தியா தாக்குதலில் மசூத் அசாத்தின் குடும்பம் சிதைந்ததாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

கடந்த 6ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற மிசன் முஷ்தபா மாநாட்டில் இல்யாஸ் காஷ்மிரி உருதில் பேசுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

பலர் துப்பாக்கிகள் ஏந்திய நிலையில், அவர்களுக்கு மத்தியில் இல்யாஸ் காஷ்மீரி "சித்தாந்தம்மற்றும் நாட்டின் புவிபரப்பு எல்லையை பாதுகாப்பதற்கு நாம் டெல்லி, காபூல், கந்தகார் மீது தாக்கதல் நடத்தினோம். அனைத்து தியாகங்களையும் செய்த பிறகு, மே 7ஆம் தேதி மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் பஹவல்பூரில் இந்திய தாக்குதலில் சிதைந்துவிட்டனர்" எனக் கூறுவதுபோல் வீடியோவில் உள்ளது.

லாகூரில் இருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தில் உள்ள பஹல்வர்பூர் ஜமியா மஸ்ஜித் சுபான் அல்லாஹ் மீது இந்திய தாக்குதல் நடத்தியதில் மசூத் அசார் குடும்பத்தை சார்ந்த 10 பேரும், அவருக்கு நெருங்கிய உதவியாளர்கள் நான்கு பேரும் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது. மசூத அசாரின் மூத்த சகோதரி, அவருடைய கணவர், மருமகன், அவருடைய மனைவி, ஐந்து குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டனர்.

1999ஆம் ஆண்டு IC-184 விமானம் கடத்தப்பட்டபோது, விமானிகளுக்குப் பதிலாக அசார் ஜெயிலில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டார். இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து 2019ஆம் அண்டு ஐ.நா. மசூத் அசார உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது. 2019 ஏப்ரலில் இருந்து மசூத் அசார் பொது வெளியில் காணப்படவில்லை. அவர் பஹவல்பூரில் பாதுகாப்பான இடத்தில் மறைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஜேஇஎம் இந்தியாவில் 2001 பாராளுமன்ற தாக்குதல், 2000-த்தில் ஜம்மு-காஷ்மீர் சட்டசபை மீது தாக்குதல், 2016 பதான்கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல், 2019 புல்வாமா தற்கொலை படை தாக்குதல் போன்ற பயங்கரவாத செயல்களை நடத்தியுள்ளது.

Tags:    

Similar News